தலித் பிரச்சனை இல்ல!! மனித பிரச்சனை - திருமா

தலித் பிரச்சனை இல்ல!!  மனித பிரச்சனை - திருமா

புதுக்கோட்டை வேங்கைவயல் சாதி தீண்டாமை இருப்பதை கண்டித்து விடுதலைசிறுத்தை கட்சியினர் மாவட்டம் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் அதில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிகவின் தலைவர் தொல் திருமாவளவன் பேசியது.


சிபிசிஐடி நியமிக்கப்பட்டு 2 வாரங்கள் ஆன பின்பும் இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. அரசிற்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. ஏன் தலித் பிரச்சனையாக மட்டுமே பார்க்கவேண்டும் மனித பிரச்சனையாக பார்க்கவேண்டாமா?  ஒரு குறிப்பிட்ட சாதி பிரச்சனையாக பார்க்கவேண்டும் ஏன் மனிதபிமான பிரச்சனையாக பார்க்கவேண்டாமா?சட்ட அடிப்படையில்  இயங்கவேண்டாமா? இனிமேல் யாரும் இப்படி செய்யகூடாது என்கின்ற அடிப்படையில் இயங்கவேண்டாமா?

ஊரை கொழுத்தினாலும் கைது செய்யவில்லை சூரையாடினாலும் கைதுசெய்யவில்லை கொலை செய்தாலும் கைதுசெய்யவில்லை, கைது செய்ய ஏன் தயக்கம்?  குடிநீரில் மனிதக்கழிவை கலந்தவர்களை கைது செய்வதில் ஏன் இவ்வளவு தயக்கம்?  300 குடும்பங்களை கிட்ட தட்ட தனிதனியாக விசாரித்தாலும் கூட 3முதல் 4 நாட்களில் விசாரித்திருக்க முடியும்  எப்படி பார்த்தாலும் 1000 பேர் தான் இருப்பார்கள் இதுவரை  எந்த பயனுமில்லை, என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எத்தனையோ பிரச்சனைகளை நீதிமன்றங்கள் அவர்களே எடுத்து நடத்துகிறார்கள் ஆனால் இந்த பிரச்சனையில் மட்டும் ஏன் நீதியரசர்கள் அமைதி காக்கிறார்கள் என தெரியவில்லை .  
 தேசிய ஆணையம் இதுவரை போகவில்லை, மாநில ஆணையம் இதுவரை போகவில்லை போககூடாது என அரசியல சட்டம் சொல்லுதா? போகக்கூடாது என சொல்வதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லை.

 100  சதவீதம் தனித்து இயங்ககூடிய ஆணையம் 
தேசிய ஆணையம் , மாநில ஆணையம் சம்பவ இடத்திற்கு போனால ஏன் போனாய என கேட்பதற்கு முதல்வருக்கோ மாந்திரிக்கோ அதிகாரிக்கோ உரிமை இல்லை 

மனிதாபிமான அடிப்படையில் தேசிய ஆணையமோ மாநில ஆணையமோ போயிருக்க வேண்டும் ஆனால் அங்கே சமூக நீதி கண்காணிப்பு போயிருக்கு சம்பந்தமே இல்ல தொடர்பே இல்ல இவையேல்லாம் பொதுவெளியில் பேசப்படவேண்டிய பொறுப்பும் நீதி வாங்கி தரவேண்டிய பொறுப்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கு.  இதற்கான மாநிலம் முழுவதும் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திருக்கிறோம். இதில் வேதனை என்னவென்றால் கம்யூனிஸ்ட் கட்சியும் விசிக மட்டுமே கண்டனங்கள்  தெரிவித்திருக்கிறது .