நீலகிரி : தடுப்பு சுவர் இடிந்து விழும் நேரடி காட்சி..!

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் உதகையில் வேல்வியூ பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழும் நேரடி காட்சி வெளியாகியுள்ளது.

நீலகிரி : தடுப்பு சுவர் இடிந்து விழும் நேரடி காட்சி..!

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரம் அடைந்து, உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 9 நாட்களுக்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது.

இதனால் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மண்சரிவுகள் ஏற்பட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. இதனை அப்புறப்படுத்தவும் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோர் இருபதுக்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உதகையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் உதகை அருகே உள்ள வேல்யூ பகுதியில், தனியாருக்கு சொந்தமான பகுதியில் கட்டப்பட்டுள்ள 40 அடி உயரம் கொண்ட தடுப்பு சுவர் முற்றிலுமாக இடிந்த விழுந்தது. இதனை அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் தங்களது செல்போனில் பதிவிட்டுள்ள, இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. 

இதனால், முறையான அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக தடுப்பு சுவர் அமைத்த தனியார் விடுதி உரிமையாளர் மீது வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.