அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்களுக்கு தடை விதிக்கக்கோரி புதிய மனு தாக்கல்!

அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்களுக்கு  தடை விதிக்கக்கோரி புதிய மனு தாக்கல்!

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப்பின், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறப்பட்டுள்ளது.

வழக்குக்கான கூடுதல் மனுக்களை கட்சி உறுப்பினர்களான வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனும், சுரேன் கே.சி.பழனிச்சாமியும் தாக்கல் செய்துள்ளனர்.

உட்கட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என இருவரும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களைக் கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதிதாக கட்சிப் பதவிகளில் நியமனம் செய்திடவும் தடை விதிக்கும்படி அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.