சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வழிகாட்டு குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் - ககன்தீப் சிங் பேடி

சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வழிகாட்டு குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் - ககன்தீப் சிங் பேடி

சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வழிகாட்டு குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குழுவின் தலைவராக ககன்தீப் சிங் பேடியும், துணைத்தலைவராக வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மாநகராட்சி துணை ஆணையர் பிரசாந்த் உட்பட 7 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் மேயர் இல்லாததால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வழிகாட்டுதல் குழுவில் மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வழிகாட்டு குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், இன்று மாலை ரிப்பன் மாளிகையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.