வனவிலங்குகளை பாதுகாக்கும் புதிய நடவடிக்கை.. டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பி அளித்தால் ரூ.10!!

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில்  மதுபானம் வாங்குவோர் காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தால் பத்து ரூபாய் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வனவிலங்குகளை பாதுகாக்கும் புதிய நடவடிக்கை.. டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பி அளித்தால் ரூ.10!!

நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன்- சதீஷ்குமார் அமர்வு, டாஸ்மாக் மதுபான கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், விலங்குகள் மிதிக்கும் போது காயமடைந்து அடுத்த மூன்று மாதங்களில் இறந்து விடுவதாக குறிப்பிட்டனர்.

அதனால், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக 25-ம் தேதிக்குள் திட்டத்தை வகுக்கும்படியும், தவறினால் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

இதன் அடிப்படையில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திருப்பிக் கொடுத்தால்10 ரூபாய் வழங்கப்படும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் திரும்பப் பெறப்படும் பாட்டில்கள் அந்த மாவட்டத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.