நவ. 16 இல் மீண்டும் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் கணிப்பு

நவ. 16 இல் மீண்டும் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் கணிப்பு

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நிலப்பகுதியை அடைந்ததையடுத்து, வடகடலோர தமிழக மாவட்டம், புதுச்சேரி பகுதிகளின் மேல் நிலைகொண்டுள்ளது.  இது இன்றும், நாளையும் தமிழக உள் மாவட்டங்கள், கேரளா வழியாக மேற்கு - வடமேற்கு திசையில் அரபிக்கடல் நோக்கி நகர்கிறது. பின்னர் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொள்ளும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும்   நாளை(நவ.13) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. 

மேலும், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 16 ஆம் தேதி மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க : ” ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு பாயும்...” வீட்டு திருட்டு சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுத்த நடிகை...!