17 நாட்களாக நடைபாதை வாசிகளுக்கு மதிய உணவு வழங்கும் நியூ கல்லூரி முன்னாள் மாணவர்கள்!! 

கடந்த 17 நாட்களாக நடைபாதை வாசிகள் 700 பேருக்கு  மதிய உணவு வழங்கும் ராயப்பேட்டை நியூ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர்

17 நாட்களாக நடைபாதை வாசிகளுக்கு மதிய உணவு வழங்கும் நியூ கல்லூரி முன்னாள் மாணவர்கள்!! 

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வசிக்கும் நடைபாதை வாசிகளுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ராயப்பேட்டை கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் மற்றும் தற்போது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் இணைந்து கடந்த மே மாதம்  15 ம் தேதி முதல் மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

கடந்த 15 ம் தேதி 15 பேருக்கு மதிய உணவாக  சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டம் தற்போது நாள் ஒன்றுக்கு 600 பேருக்கு வழங்கி வருவதாக மாணவர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கு முடியும் வரை இந்த உணவு வழங்கும் திட்டம் தொடரும் எனவும் 7 ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் 3 வேளை உணவு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.