நீட் தேர்வு: மேலும் ஒரு மாணவி தற்கொலை

அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு: மேலும் ஒரு மாணவி தற்கொலை

அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீட் தேர்வில் இரு முறை தோல்வி அடைந்ததால் மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் நேற்று (12-09-2021) நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், நீட் தேர்வு பயத்தால் மன உளைச்சலில் இருந்த அரியலூரை சேர்ந்த மாணவி கனிமொழி தற்கொலை செய்ததாக பெற்றோர் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் தனியார் பள்ளியில் படித்த மாணவி கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 600 மதிப்பு 562.28 மதிப்பெண் எடுத்திருந்தார். பத்தாம் வகுப்பிலும் 500க்கு 469 மதிப்பெண்கள் எடுத்து தனியார் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த நிலையில், நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என மனஉளைச்சலில் மாணவி கனிமொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஏற்கனவே மேட்டூரை சேர்ந்த மாணவன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது