நாட்றம்பள்ளி : அரசு விரைவு பேருந்து கவிழ்ந்து விபத்து...!

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில், விரைவு சொகுசு பேருந்து நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்தவர்கள் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

நாட்றம்பள்ளி : அரசு விரைவு பேருந்து கவிழ்ந்து விபத்து...!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில், திருப்பதியிலிருந்து சேலம் நோக்கி சென்ற விரைவு சொகுசு பேருந்து நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பயணிகள் உயிரிழப்பு ஏதுமின்றி சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி காவல்துறையினர் அனைவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சொகுசு பேருந்து விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குரிசிப்பிடத்தக்கது. திருப்பதியிலிருந்து சேலம் சென்ற அரசு பேருந்து குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க முயன்ற போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.