தேசிய அளவிலான சிலம்பப்போட்டி.. 20 தங்கம், 10 வெள்ளி பதக்கங்கள் - தட்டி தூக்கிய தமிழக மாணவர்கள்!!

தேசிய அளவிலான சிலம்பப்போட்டியில் தமிழக மாணவர்கள் 20 தங்கம், 10 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

தேசிய அளவிலான சிலம்பப்போட்டி.. 20 தங்கம், 10 வெள்ளி பதக்கங்கள் - தட்டி தூக்கிய தமிழக மாணவர்கள்!!

டெல்லியில் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 138க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

அவர்களில், சென்னையை சேர்ந்த 30 மாணவர்களும் அடங்குவர். இந்த போட்டியில் தங்களது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சென்னை மாணவர்கள் அனைவரும் பதக்கங்கள் வென்று அசத்தினர். 20 தங்கப் பதக்கங்கள் 10 வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் 30 பதக்கங்களுடன் ரயில் மூலம் சென்னை திரும்பிய தமிழக மாணவர்களுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அடுத்த முறை, வெள்ளி பதக்கங்களின்றி அனைத்திலும் தங்கப் பதங்களையே வெல்ல வேண்டும் என்பதே தங்களது குறிக்கோள் என மாணவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். தேசிய அளவில் நடைபெற்ற இந்த சிலம்பப் போட்டியில் மாணவர்கள் வெற்றி பெற்றதற்காக இரண்டாம் தர சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக பயிற்சியாளர் சண்முகம் தெரிவித்தார். இதன் மூலம் எதிர்காலத்தில் பத்து,பன்னிரண்டு மற்றும் கல்லூரிகளில் சேரும் பொழுது  சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறினார்.