ஒரு வாரம் முடிந்தும் அகற்றப்படாத தேசியக்கொடிகள் : சேதமடைந்து கிழிந்து தொங்கும் அவலம் !!

ஒரு வாரம் முடிந்தும் அகற்றப்படாத தேசியக்கொடிகள் : சேதமடைந்து கிழிந்து தொங்கும் அவலம் !!

75ஆம் ஆண்டு சுதந்திர தினம்

சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டு விடுதலை நாளை சிறப்பாக கொண்டாடும் வகையிலும் விடுதலைக்காக போராடிய வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் தங்களது இல்லங்களில் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு சார்பிலும் மாநில அரசு சார்பிலும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தேசியக்கொடி 

கூடுதலாக சென்னை மாநகராட்சியும் இது குறித்தான வெளியிட்டிருந்த அறிக்கையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் வணிக வளாக கட்டிடங்கள் கடைகள் வீடுகள் போன்றவற்றில் தேசியக் கொடியினை 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களும் ஏற்ற வேண்டும் என்றும் அதன் பிறகு தேசிய கொடியை பத்திரமாக இறக்கி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் அநேகமான மக்கள் இதற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் தேசிய கொடியை ஏற்றி இருந்தனர்.

மேலும் படிக்க  : அமைச்சரின் கார் மீது காலணி வீசிய வழக்கு : மூன்று பெண்களுக்கு ஜாமின் இல்லை !!

அகற்றப்படாத கொடி

இதற்கு வரவேற்பு தெரிவிக்க வகையில் நாடு முழுவதும் மக்களும் அதே போன்று தமிழகத்தில்  பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்களும் தங்களது இல்லங்களில் தேசியக்கொடி ஏற்றினர். ஆனால் சுதந்திர தினம் முடிந்து ஏழு நாட்கள் கடந்த நிலையிலும் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் ஏற்றப்பட்ட தேசிய கொடிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. 

சேதமடைந்து கேட்பாரின்றி...

குறிப்பாக  சிந்தாதிரிப்பேட்டை அண்ணாசாலை போன்ற நகரின் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் மழையில் நனைந்தும் சேதமடைய கூடிய நிலையிலும் உள்ள காட்சி சமூக ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மரியாதை நிமித்தமாக தேசிய கொடியை இல்லங்களில் ஏற்ற வேண்டும் என்று கூறிய அரசு மீண்டும் அதை மூன்று நாட்கள் கழித்து மக்கள் அப்புறப்படுத்துவதற்காக எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை  என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் இடையே எழுந்து வருகிறது.