காஞ்சிபுரத்தில் தேசிய கொடியேற்ற விடவில்லை: பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் புகார்....

காஞ்சிபுரத்தில் தேசிய கொடியேற்ற விடவில்லை: பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் புகார்....

கைது செய்யப்படவில்லை - பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் புகார்

காஞ்சிபுரம்  ஊராட்சி  ஒன்றியத்துக்கு  உட்பட்ட திருப்புட்குழி ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த சுகுணா. இந்நிலையில் திருப்புட்குழி பகுதியை சேர்ந்த சிலர் ஊராட்சிமன்ற தலைவரை தரக்குறைவாக பேசிய நிலையில் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் சுகுணா
புகார் அளித்ததின் பேரில் எஸ் சி எஸ் டி சட்டப்படி மற்றும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு இதுநாள் வரை குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை.

74 ஆவது குடியரசு தினவிழா

இந்நிலையில் 74 ஆவது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்ட நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்தபின் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற சென்றுள்ளார்.

அங் குகொடியேற்ற சென்ற ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவை, தரக்குறைவாக பேசிய வழக்கில் சிக்கி உள்ள நபர்களான பாலச்சந்தர், செல்வம், ஆகியோர் கொடியேற்ற விடாமல் தடுத்தது மீண்டும் தரக்குறைவாக கொலைமிரட்டல் விடுக்கும் வகையில் பேசி ஊராட்சிமன்ற தலைவரை தேசியக்கொடி ஏற்றவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் அந்தபகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அவதூறாக பேசி தனக்கு கொலைமிரட்டல் விடுத்த நிலையில், இன்று மீண்டும் தேசியக்கொடி ஏற்றவந்த இடத்தில் மீண்டும் அச்சுறுத்திதகாத வார்த்தைபேசி கொலைமிரட்டல் விடுத்தநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சிமன்ற தலைவர்சுகுணா, பாலுசெட்டிசத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

மேலும் படிக்க | ஆளுமைகள் பாதையில் நடப்பது நமது கடமை - குடியரசு தினத்தில் குடியரசு தலைவர் பேச்சு

ஆதி திராவிட வகுப்பை சார்ந்த ஊராட்சி மன்ற தலைவரை பள்ளிகளில் தேசியக்கொடியை ஏற்றவிடாமல் தடுத்தாக காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் தீர்ப்பு திருப்புட்குழி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.ஊராட்சிமன்ற தலைவரின்புகாரின் பேரில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரதி ராஜேந்திரன்