தமிழக டிஜிபியிடம் கொடுத்த நோட்டீசை திரும்ப பெற்றுள்ளது தேசிய மகளிர் ஆணையம் - காரணம் என்ன?

தமிழக டிஜிபியிடம் கொடுத்த நோட்டீசை திரும்ப பெற்றுள்ளது தேசிய மகளிர் ஆணையம் - காரணம் என்ன?

கலாசேத்ரா பவுண்டேசனில் பாலியல்  துன்பறுத்தல் இருப்பதாக கொடுத்த நோட்டீசை தேசிய மகளிர் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.கலாசேத்ராவின் முன்னாள் பெண் இயக்குனர் ஒருவர் சமீபத்தில் சமூக வலைதளம் மூலமாக பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.யிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோட்டீஸ் அளித்திருந்தனர்.

மேலும் படிக்க | ஒன்றரை லட்சம் புதிய உறுப்பினர்கள் திமுகவில் சேர்க்க - திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல்குள்ளானதாக கூறபப்டும் பெண் கலாசேத்ராவில் அது போன்ற எதுவும் இல்லை எனவும் அவதூறு பரப்பும் வகையில் உள்ளது எனவும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் புகார் அளித்த பெண்ணிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையமே அந்த புகாரை திரும்ப பெற்றுள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக கூறப்படும்  பெண்பல் உண்மையில் அது போன்று இல்லை என புகார் அளித்தால் கொடுத்த நோட்டீசை தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவிடம் திரும்ப பெற்றுள்ளது.

மேலும் படிக்க | தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் - மத்திய ரயில்வே அமைச்சர்