ஆள்வது திமுக... கல்வெட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் பெயரா? வத்தலகுண்டில் பரபரப்பு

வத்தலகுண்டு அருகே கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தை திறந்து வைத்தது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு என அதிமுகவினர் புதிய கல்வெட்டை வைத்ததற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்வெட்டு அகற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ரூபாய் 19 லட்சம் செலவில் புதிதாக கிட்டங்கி கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த கிட்டங்கி பயன்பாட்டில் செயல்பட்டு வந்த நிலையில் இன்று காலையில் தொடக்க வேளாண்மை சங்க தலைவரும் அதிமுக  நகர செயலாளர் மாசனம் அந்த கட்டிடத்தின் முன்பு  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கடந்த ஆண்டு ராஜு திறந்து வைத்ததாக  புதிதாக கல்வெட்டை வைத்துள்ளார்.

கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில் ஆட்சியும் மாறி அந்த துறைக்கான அமைச்சரும் மாறி இருக்கும் நிலையில் வேண்டுமென்றே கல்வெட்டு வைத்திருப்பதாக புகார் எழுந்தது.இதை அறிந்த திமுக நகர செயலாளர் தங்கராஜ் தலைமயில் திரண்ட தி.மு.க வினர் மற்றும் சங்க உறுப்பினர்கள்  வங்கி செயலாளருடன் முருகனுடன்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. திமுகவின் போராட்டத்தை தொடர்ந்து கூட்டுறவு அதிகாரிகள் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட கல்வெட்டை அகற்ற உத்தரவிட்டனர் இதனை அடுத்து  அந்த கல்வெட்டு அகற்றப்பட்டது .