மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு...

அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக 75 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் குணசீலன். இவர் சத்துணவு மற்றும் சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜாவின் நெருங்கிய உறவினராவார். இந்த நிலையில் சரோஜா சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தம்மிடம் 76 லட்சத்து 50 ஆயிரம்ரூபாய்  மோசடி செய்ததாக ராசிபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார்..
 
அதில் முன்னாள் அமைச்சர் சரோஜா தம்மையும், தமது மனைவியையும் அழைத்து ராசிபுரத்தில் வீடு கட்ட வேண்டும். எனவே அதற்கு பணம் வாங்கி கொடுத்தால் சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று தம்மிடம் கூறியதாகவும், இதனை நம்பி தமது மனைவி 15 பேரிடம் 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கி அதில்  50 லட்சத்தை முதற்கட்டமாக தனது  வீட்டில்வைத்து சரோஜாவிடம் வழங்கியதாக தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து 2-வது கட்டமாக 26 லட்சத்து 50 ஆயிரத்தை  வழங்கியதாகவும், ஆனால் சரோஜா  கூறியபடி தம்மிடம் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார் என்றும் குணசீலன் தனது புகாரில் கூறி இருந்தார்.  இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் தற்போது சரோஜாவிற்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்கிறது. 

ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர், வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.