”நீட் - ஆயுஷ் அமைச்சகத்திற்கு இன்னும் ஓரிரு வாரங்களில் விளக்கம்” அமைச்சர் உறுதி!

”நீட் - ஆயுஷ் அமைச்சகத்திற்கு இன்னும் ஓரிரு வாரங்களில் விளக்கம்” அமைச்சர் உறுதி!

நீட் விலக்கு மசோதா குறித்து இன்னும் ஓரிரு வாரத்திற்குள் ஆயுஷ் அமைச்சகத்திற்கு விளக்கம் அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நான்கு மாதத்திற்குள் நிறைவடையும் :

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தின்முன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீர்செய்யும் பணி போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த சீரமைக்கும் பணி என்பது இன்னும் நான்கு மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.

புகார்களுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் :

தொடர்ந்து, இன்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது கழிவுநீர் குடிநீரில் கலப்பதாகவும், தெரு நாய்களின் தொல்லை குறித்தும் புகார்கள் வந்தது, அதனை தடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதேபோல தெரு நாய்கள் பெருக்கத்தை தடுக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : மக்களே உஷார்...!தமிழ்நாட்டில் வரும் 25 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...!

பாராட்டு விழா :

மேலும், வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மீள்வதற்கு அரசுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அலுவலர்களுக்கும் வரும் 31ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாகவும் கூறினார். 

ஒரு வாரத்திற்குள் விளக்கம் :

தொடர்ந்து பேசிய அவர்,  நீட் விளக்கு மசோதா குறித்து ஆயுஸ் அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், இன்னும் ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.