மர்மமான முறையில் கர்ப்பிணி மரணம்... உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை...

புதுக்கோட்டை அருகே கடந்த 4 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்த 8 மாத கர்ப்பிணியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை.

மர்மமான முறையில் கர்ப்பிணி மரணம்... உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை...

புதுக்கோட்டை மாவட்டம் கலியரான் விடுதி பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மனைவி மோனிஷா என்ற 8 மாத கர்ப்பிணி பெண் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இறப்பு குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவிக்காமல் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கலியரான்விடுதி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பெயரில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா முன்னிலையில் கர்ப்பிணியின் உடலை தோண்டி எடுத்து மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறு ஆய்வு நடைபெற்றது.

உடற்கூறு ஆய்வில் கொலையா தற்கொலையா என்று குறித்து நாளை தகவல் அளிக்கப்படும் என்று கோட்டாட்சியர் தகவல் அளித்தார் இறந்த பெண்ணின் சடலத்தை தோன்றி உடற்கூறு ஆய்வு செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.