மர்மமான முறையில் இளைஞர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அடையாளம் தெரியாத இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மர்மமான முறையில் இளைஞர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

கோவில்பட்டி அடுத்த கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட தளவாய்புரத்தில் இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரின் தலையில் இருந்த காயம் மற்றும் இரண்டு கால்களும் முறிந்த நிலையில் இருந்தால் இரும்பு கம்பி போன்ற ஆயுதத்தால் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி காவல்துறையினர் இளைஞரின் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.