பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்..!

விழுப்புரம் ஜானகிபுரம் பெட்ரோல்  நிலையத்தில் எரிபொருள் நிரப்பிவிட்டு  காசு கொடுக்காததுடன் பெட்ரோல் பங்கை அடித்து உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெட்ரோல் போட்டுவிட்டு பணம்  கொடுக்காமல் பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்..!

விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கு குடிபோதைதில் இருசக்கர வாகனத்தில்  வந்த கண்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபா,தீனா உள்ளிட்ட நான்கு பேர் பெட்ரோல் பேட்டுள்ளனர்.

ஆனால் அதற்கு உண்டான பணத்தை கொடுக்காமல் பங்க் ஊழியர்  அருண்குமாரிடம்  தகராறில் ஈடுபட்டனர். இதனை தட்டிக்கேட்ட  மேலாளர் கார்த்தியை  கடுமையாக தாக்கியதுடன்  பெட்ரோல் பங்கை அடித்து உடைத்து சூறையாடினர்.

இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த பதிவின் அடிப்படையில் மேலாளர் கார்த்தி விழுப்புரம் தாலுகா காவல்துறையிடம்  புகார் அளித்ததன் பேரில் கண்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த தீனா, பிரபா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

படுகாயமுற்ற பெட்ரோல் பங்க் மேலாளர் கார்த்தி ஊழியர் அருண்குமார் உள்ளிட்ட  நான்கு நபர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.