பூட்டிய கடையில் கைவரிசை காட்டிய மர்மநபர்கள்- ரூ. 1.50 லட்சம் கொள்ளை

மயிலாடுதுறையில் கடையின் பூட்டு மற்றும் சிசிடிவி கேமராவை உடைத்து ஒன்றரை லட்ச ரூபாய் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பூட்டிய கடையில் கைவரிசை காட்டிய மர்மநபர்கள்- ரூ. 1.50 லட்சம் கொள்ளை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மையப்பகுதியில் அமைந்துள்ள கண்ணார தெரு என்ற இடத்தில் அலுமினிய  கடை உள்ளது. நேற்று இரவு இந்த கடையின் பூட்டு மற்றும் சிசிடிவி கேமராவை உடைத்து உள்ளே இருந்த பணம் ஒன்றரை லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக கடைக்கு வந்த கடைக்காரர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையில் உரிமையாளர் திருட்டு சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.