திமுக ஆட்சிக்கு வந்த ஆறு மாசமும் மர்மதேசமாக தான் இருக்கு தமிழ்நாடு ...அச்சத்தோடு பணியாற்றும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள்...சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு...!

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆறு மாத காலமாக தமிழகம் "மர்மதேசமாக"விளங்கிக்கொண்டிருக்கிறது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த ஆறு மாசமும் மர்மதேசமாக தான் இருக்கு தமிழ்நாடு ...அச்சத்தோடு பணியாற்றும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள்...சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு...!

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில்,

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தை ராஜினாமா செய்ய திமுக வற்புறுத்தியது என்றும் வெங்கடாசலம் தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக கூறிய அவர்,. திமுக தலைமையகத்தின் மீது குற்றச்சாட்டு வரும்போதெல்லாம் தற்கொலை நடைபெறுகிறது  இது தொடர்கதையாக உள்ளது என குற்றம் சாட்டினார்.  

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் வரை அச்சுறுத்த படுகிறார்கள் என்றார். மேலும் அதிமுகவினர் மீது பொய் புகார் அளிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையில் மர்மம் உள்ளதாகவும், தற்கொலை வழக்கை சிபிஐ விசாரனைக்கு மாற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.