திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்த வழக்கு...2 பேருக்கு ஆயுள் தண்டனை.!!

நாமக்கல் அருகே திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்த வழக்கு...2 பேருக்கு ஆயுள் தண்டனை.!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள பட்டணத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நாகர்பாளையத்தை சேர்ந்த நடராஜ் என்பவரை அவரது உறவினர்களான குமரேசன், சுப்பிரமணி  மற்றும் துரைசாமி  ஆகியோர் கட்டையால் அடித்து கொலை செய்தனர்.

இந்த  வழக்கின் குற்றவாளியான குமரேசன்,  சுப்பிரமணி மற்றும் துரைசாமி  ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில்  குமரேசன்,  சுப்பிரமணி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், துரைசாமி என்பவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.