ஆளுநர் பவனா? ஆர்.எஸ்.எஸ் பவனா? - முரசொலி விமர்சனம்!

ஆளுநர் பவனா? ஆர்.எஸ்.எஸ் பவனா? - முரசொலி விமர்சனம்!

ஆளுநரின் ராஜ்பவன் ஆர்.எஸ்.எஸ் பவனாக செயல்படுவதாக முரசொலி விமர்சனம் செய்துள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் என்ன சொல்கிறாரோ அதையே ராஜ்பவனிலிருந்து ஆளுநர் ஆர்.என். ரவி சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆங்கிலேயர் வந்த பிறகு தான் கல்வி கற்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார் மோகன் பகத்... அதையே ஆளுநர் சில நாட்களுக்கு முன்னால் எதிரொலித்து இருக்கிறார் என்று விமர்சித்துள்ளது.

இதையும் படிக்க : பள்ளி சிறார்களுக்கான புன்னகை திட்டம் தொடக்கம்...துவங்கி வைத்த அமைச்சர்கள்!

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பும் சட்டங்கள் இருந்தன. ஆனால், அனைவருக்கும் பொதுவான சட்டமாக இல்லை ஜாதிக்கு தகுந்த மனுவின் சட்டமாகவே இருந்தது, அதுபோலவே தான் கல்வியும் இருந்தது. அது அனைவருக்குமான பொதுக் கல்வியாக இருந்ததா என்றால் இல்லை. இன்னார் படிக்கலாம் என்பதாக இருந்தது அதை அனைவருக்கும் பொதுவாக ஆக்கியதுதான் பிரிட்டிஷ் ஆட்சி கல்வி முறை என்று முரசொலி விமர்சனம் செய்துள்ளது.