முரசொலி பாசறையின் முதல் கட்டுரை வெளியானது!!

முரசொலி பாசறையின் முதல் கட்டுரை வெளியானது!!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் திமுக இளைஞரணி சார்பிலான முரசொலி பாசறையை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் திராவிட கொள்கைகளை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் முரசொலி நாளேட்டில் ஒரு பக்கம் முரசொலி பாசறைக்காக ஒதுக்கப்படும் என அறிவித்தார்.

அமைச்சர் உதயநிதியும் கி.வீரமணி, ஜெயரஞ்சன், சுப. வீரபாண்டியன் அருள்மொழி, மருத்துவர் எழிலன் ஆகியோர் வார வாரம் பயிற்சி பரப்புரைகளை முரசொலி பாசறை பக்கத்தில் எழுதுவார்கள் என தெரிவித்தார்.

இந்த நிலையில் முரசொலி பாசறையின் முதல் பரப்புரை கட்டுரையை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எழுதி முரசொலியில் பிரசுரமாகியுள்ளது.

கலைஞரும் நானும் எனும் தலைப்பில் ஆசிரியர் வீரமணியின் கட்டுரையும், திராவிடத்தால் வாழ்கிறோம் எனும் படக் கதையும் பிரசுரமாகியுள்ளது.