சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்றுக் கொண்டார். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜீப் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, பண்டாரியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி, உச்சநீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்துக்கு பரிந்துரைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர், அதுதொடர்பான உத்தரவை பிறப்பித்தார். 

இந்த நிலையில் முனீஷ்வர்நாத் பண்டாரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்று கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என். ரவி, முனீஷ்வர்நாத் பண்டாரிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டு தலைமை நீதிபதிக்கு  வாழத்து  தெரிவித்தனர்.