பல்கலைக் கழகங்களின் தேர்வு கட்டணம் பன்மடங்கு உயர்வு  - வகுப்புகளை புறக்கணித்து  மாணவ மாணவியர்கள் போராட்டம்

பல்கலைக் கழகங்களின் தேர்வு கட்டணம் பன்மடங்கு உயர்வு - வகுப்புகளை புறக்கணித்து மாணவ மாணவியர்கள் போராட்டம்

பல்கலைக் கழகங்களின் தேர்வு கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி இருப்பதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்  வகுப்புகளை புறக்கணித்து மாணவ மாணவிக்ள போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

காவிரி டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்க்கு உட்பட்ட கல்லூரிகளில் ஏழை எளிய விவசாய தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

தமிழக அரசின் ஆலோசனையின் பெயரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது இதனாலட  மாணவ மாணவியர்களின் கல்லூரி கல்வி  கேள்வி குறியாக்கியுள்ளது.இந்நிலையில்  மன்னார்குடியில்  அரசு கல்லூரி மாணவ மாணவியர்கள் கல்லுரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் தஞ்சை  நாகை திருவாரூர் , உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள  அரசுகலைக்கல்லூரி மாணவ மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.. தேர்வு கட்டணத்தை  உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அப்போது  வலியுறுத்தப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com