மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு....பத்திரமாக மீட்பு

பெரம்பலூர் அருகே மீன் வலையில் சிக்கிய  மலைப்பாம்பை, தீயணைப்புத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.  

மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு....பத்திரமாக மீட்பு

பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கோட்டையானது வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையாக விளங்கி வருகிறது. இப்பகுதியின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது இக்கோட்டை. இந்நிலையில் ரஞ்சன்குடி கோட்டைக்கு பின்புறம் உள்ள தடுப்பணை மதகில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு உள்ளதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புவீரர்கள், மீன் வலையில் சிக்கிக் கொன்டு வெளியே வரமுடியாமல் போராடிக் கொண்டிருந்த மலைபாம்பை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர், பத்திரமாக  வனப்பகுதியில் விட்டனர்.