தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை மையம்,

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும் என்பதால், அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.