ஊழல் செய்த பி.ஏக்களை திருப்பி அனுப்பிய மந்திரிகள்.! ஸ்டாலின் மீதான பயத்தால் நடவடிக்கை.! 

ஊழல் செய்த பி.ஏக்களை திருப்பி அனுப்பிய மந்திரிகள்.! ஸ்டாலின் மீதான பயத்தால் நடவடிக்கை.! 

தான் நியமித்த உதவியாளர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் என்று தெரியவந்ததால் அவர்களை அந்த பொறுப்பிலிருந்து இரு அமைச்சரகள் நீக்கியுள்ளனர். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அதன் பின் மே 7ம் தேதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க அங்கே அவரது அமைச்சரவையும் பொறுப்பேற்றது. அதன் பின் அமைச்சர்கள் தங்களுக்கு சாதகமானவர்களை தங்கள் உதவியாளர்களாக நியமித்தார்கள். 

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் தன் உதவியாளராக ஒருவரை நியமித்துள்ளார். ஆனால் அந்த அதிகாரி கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர் என்றும், அதற்கு துணையாக இருந்தவர் என்றும் வேலுவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அவர் உடனடியாக அந்த உதவியாளரை திருப்பி அனுப்பியுள்ளார்.  

இதேபோல சம்பவம் நீர்பாசனத் துணைஅமைச்சர் துரைமுருகனும் தனது உதவியாளராக மூத்த அரசு அதிகாரியை நியமித்துள்ளார். ஆனால் அவரும் கடந்த ஆட்சியில் அதிமுகவினருக்கு நெருக்கமாக இருந்ததாகவும், ஊழல் செய்ததாகவும் தகவல் வரவே அப்படியே அவரை அந்த பழைய பதவிக்கு அனுப்பி விட்டு, அவரின் பணிஉயர்வையும் தடை செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

நீண்ட நாட்களுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. கட்சியின் மீதோ, ஆட்சியின் மீதோ எந்த எந்த அவதூறும் வரக்கூடாது. அப்படி புகார் வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அமைச்சர்கள் கவனமாக இருக்கிறார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.