மாலைமுரசு செய்தி எதிரொலி... மூதாட்டிக்கு பசுமை வீடு வழங்க அமைச்சர் உத்தரவு...

ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி ஊராட்சி எம்ஜிஆர் நகரில் குடிசையை வீட்டில் வாழும் மூதாட்டிக்கு பசுமை வீடு வழங்க அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் உத்தரவிட்டார்.

மாலைமுரசு செய்தி எதிரொலி... மூதாட்டிக்கு பசுமை வீடு வழங்க அமைச்சர் உத்தரவு...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள புதுக்கோட்டை விடுதி ஊராட்சி எம்ஜிஆர் நகரில் வசித்துவரும் மூதாட்டி லோகாம்பாள் வயது (76)  இவர் கஜா புயலின் போது இவரது வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. அப்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக இந்த மூதாட்டிக்கு மோடி வீடு  வங்கி ஆணை வழங்கினார்கள். ஆனால் ஒரு மாதத்தில் வழங்கப்பட்ட ஆணையை ஊராட்சி நிர்வாகம் வாங்கிச் சென்று அதிகாரியிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது. 

ஆனால் அதுமுதல் இன்றுவரை லோகாம்பாள் 7 பேரன் பேத்திகளுடன் (76)வயது மூதாட்டி வீட்டின்  மேற்கூரை இல்லாமல் தார்ப்பாய் விரித்து அந்த வீட்டில் 7 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தற்போது மழை. பணி வெயில் என பல இன்னல் உடன் வாழ்ந்து வருகிறார்.

தற்போது மாலை முரசு செய்தி எதிரொலியால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ வீ. மெய்யநாதன் மூதாட்டி லோகாம்பாள் வீட்டிற்கு வருகை தந்து பசுமை வீடு வணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமுக்கு அமைச்சர் பரிந்துரைத்தார்.

உடனே மூதாட்டிக்கு பசுமை வீடு கட்ட அனைத்து வசதியும் செய்து கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அரசுத்துறை அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்  அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.