அறிஞர் அண்ணா கூட்டுறவு மூலமாக 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் உறுதி

அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டையில் அமையும் தொழில் கூடங்கள் மூலம் நேரடியாக 15 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 35 ஆயிரம் பேருக்கும் என 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்

அறிஞர் அண்ணா கூட்டுறவு மூலமாக 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் உறுதி

10 ஆண்டுகள் பணிகள் நடைபெறவில்லை 

கோவை கிட்டாம்பாளையம் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டை மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில்  சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை  அமைச்சர் த.மோ.அன்பரசன் பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தார்.அப்போது நில ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மேம்பாட்டு பணிகளுக்கு 24.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் படிக்க | இன்சாகாக்'..! அவசர ஆலோசனைக் கூட்டம்

இந்த விழாவில் பேசிய அமைச்சர் த.மோ.அன்பரசன் நீண்ட நாள் கிடப்பில் கிடந்த கூட்டுறவு தொழில்பேட்டை இது எனவும்,  கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் கிடப்பில் போடப்பட்டு இருந்த்து எனவும்,மொத்தம் 316 ஏக்கர் நிலம் கையகப்படுத்தபட்டு 585 மனைகள் பிரிக்கப்பட்டு
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் இருந்ததால்  தொழில்கள் வராமல் இருந்தது எனவும் குறிப்பிட்டார். ஆட்சி மாற்றத்திற்கு பின்னர்
இங்கு நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது எனவும் அரசின் சார்பில் 10 கோடி ரூபாயும் , தொழில்முனைவோரின் பங்களிப்பாக 14 கோடி யும் என 24 கோடியில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.இங்கு தொழில் பேட்டை அமைந்தால் 
50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதுடன், ஆசியாவிலேயே அதிகம் பேருக்கு  வேலை வாய்ப்பு கிடைக்கும்  கூட்டுறவு பேட்டையாகவும்  இது இருக்கும் என தெரிவித்தார். இந்த தொழில் பேட்டைக்குதனிகவனம் செலுத்தப்படும் எனவும், 585 மனைகளிலும் தொழில்கள் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்,ஒரு வருடத்திற்குள் தொழில்பேட்டை உருவாக்க உதவிட வேண்டும் எனவும், அரசு அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயாராக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க |  நாம் தமிழர் கட்சியை காலி செய்யும் தம்பிகள்..! பேராவூரணி திலீபன் தாவிய கட்சி எது தெரியுமா?

கோவை மாவட்டம்  சூலூர் வட்டத்தில் 316 ஏக்கர் 2006 ல் தொழில் பேட்டைக்காக கையகப்படுத்தபட்டது எனவும்,திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் 
அதிமுக ஆட்சியில் எந்த பணிகளும் மேற்கொள்ள வில்லை ,இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது எனவும் தெரிவித்தார்.
316 ஏக்கர் நிலம்  பயன்படுத்தாமல் இருப்பது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு தற்போது  மேம்பாட்டு பணிகளுக்காக 24.61 நிதி  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ழ எனவும்,ஒரு வருடத்தில் 585 தொழில் மனைகளில் தொழில்கள் கொண்டு வரப்பட்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவு தொழில் பூங்காவாக இது இருக்கும் எனவும் தெரிவித்தார்.இதன் மூலம் நேரடியாக 15 ஆயிரம், மறைமுகமாக 35 ஆயிரம் பேருக்கு என 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் எனவும் தெரிவித்தார். அன்னூர் விவகாரத்தை பொறுத்த வரை விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலம் கையகப்படுத்தபடாது எனவும், விவசாயிகள் சந்தோசமாக நிலம் கொடுத்தால் மட்டுமே எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.