என்.எல்.சி நில இழப்பீடு விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்...விளக்கமளித்த அமைச்சர்!

என்.எல்.சி நில இழப்பீடு விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்...விளக்கமளித்த அமைச்சர்!

என்.எல்.சி. விவகாரத்தில் தேவைக்கு அதிகமாக விவசாயிகளின் நிலத்தை அரசு ஒருபோதும் கையகப்படுத்தாது என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

என்.எல்.சி நில இழப்பீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மான கொண்டுவரப்பட்டது. என்.எல்.சி. சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

இதையும் படிக்க : நடிகர் அஜித்தின் தந்தை மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

அப்போது, தமிழ்நாட்டின் மின் தேவையை பெருமளவில் என்.எல்.சி. பூர்த்தி செய்து வருவதாகவும், அடுத்த 5 ஆண்டுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய நில எடுப்பு அவசியமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், என்எல்சி நிறுவன விவகாரங்களை கண்காணிக்க முதலமைச்சர் உயர்மட்ட குழுவை அமைத்துள்ளார் எனவும், நிலம் கொடுப்போருக்கு என்.எல்.சி. வேலைகளில் முன்னுரிமை அடிப்படையில், தேர்வில் 20 மதிப்பெண் வழங்கப்பட உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தேவைக்கு அதிகமாக விவசாயிகளின் நிலத்தை அரசு ஒருபோதும் கையகப்படுத்தாது என்றும் தெரிவித்தார்.