நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த கொண்ட மாணவி உடலுக்கு அமைச்சர் சிவசங்கர் நேரில் அஞ்சலி!

அரியலூர் அருகே  நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த கொண்ட மாணவியின் உடலுக்கு அமைச்சர் சிவசங்கர் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

அரியலூர் மாவட்டம், சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்தார். இதனையடுத்து நேற்று முந்தினம் நடைபெற்ற நீட் தேர்வை கனிமொழி எழுதியுள்ளார். இந்நிலையில் நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறியதோடு மன உளைச்சலில் இருந்துள்ளார். மருத்துவ கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த கனிமொழி நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்நிலையில், மாணவியின் உடலுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாணவ, மாணவிகள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம்  என கேட்டுக்கொண்டார்.