"அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்" - செல்லூர் ராஜு பாராட்டு!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டு தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் அழகப்பன் நகரில் மழையால் சேதமடைந்த சாலையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் உள்ள 2 அமைச்சர்கள் முறையாக பணியாற்றவில்லை என்று புகார் கூறினார்.

இதையும் படிக்க : தீபாவளி : காவல்துறையின் 19 அறிவுரைகள்!

தொடர்ந்து, அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுவதாக கூறியவர், அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? என்றும் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.