பச்சை நிறத் துண்டுடன் வேளாண் பட்ஜெட்டை தொடங்கினார் அமைச்சர் பன்னீர்செல்வம்...!!!

பச்சை நிறத் துண்டுடன் வேளாண் பட்ஜெட்டை தொடங்கினார் அமைச்சர் பன்னீர்செல்வம்...!!!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.  இந்த நிதி நிலை அறிக்கையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.   இந்த மாதம் 23,24,27,28 ஆகிய தேதிகளில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.   நிதி அமைச்சர் உறுப்பினர்களின் கேள்விக்களுக்கு 28 ஆம் தேதி பதிலளித்து பேசவுள்ளார்.  இந்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் விவசாயிகளின் அடையாளமான பச்சை நிறத்துண்டுடன் வந்து தாக்கல் செய்து வருகிறார்.  இந்த வேளாண் பட்ஜெட்டில் விவாசியிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதையும் படிக்க:   தளபதி முதலமைச்சரை வாழ்த்துங்கள்....!!!