சுட்டெரிக்கும் வெயிலில் தவழ்ந்து சென்ற மாற்றுத்திறனாளி... பார்த்ததும் காரை நிறுத்தி இறங்கிய அமைச்சர்!!

மணப்பாறை அருகே சுட்டெரிக்கும் வெய்யிலில் சாலையோரம் தவழ்ந்து சென்ற மாற்றுத்திறனாளியை பார்த்ததும் காரை நிறுத்தி இறங்கிய அமைச்சர் கே.என்.நேரு. தேவையான உதவி குறித்து கேட்டறிந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலில் தவழ்ந்து சென்ற மாற்றுத்திறனாளி... பார்த்ததும் காரை நிறுத்தி இறங்கிய அமைச்சர்!!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு. பின்னர் உடையாபட்டியில் திமுக பிரமுகர் இறந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

உடையாபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது சுட்டெரிக்கும் வெயிலில் சாலையோரத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் தவழ்ந்து சென்று கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த அமைச்சர் கே.என். நேரு உடனடியாக காரை நிறுத்தி அந்த நபரிடம் சென்று மாற்றுத்திறனாளிக்கான வண்டி இருக்கின்றதா என்று கேட்டறிந்ததுடன் மேலும் அவருக்கு தேவையான உதவி என்ன என்பதை கேட்டறிந்ததோடு தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறியதுடன் தான் காரில் வைத்திருந்த பிஸ்கட்டை எடுத்து வந்து கொடுத்து விட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

திடீரென அமைச்சர் கே.என்.நேரு. ஒருவர் தன்னிடம் காரை விட்டு இறங்கி வந்து தன்னிடம் பேசி தேவையானவறறை கேட்டறிந்தது மாற்றுத்திறனாளி வாலிபரான அதே பகுதியைச் சேர்ந்த சாலமன் நெழிச்சிக்குள்ளாக்கியது.
 

நெகிழ்ச்சிக்குள்ளான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ் அப்களில் அதிக அளவில் வலம் வந்து கொண்டுள்ள நிலையில் அமைச்சரின் செயலுக்கு பலரும் பாராட்டை தெரிவித்து சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.