தீவிரமடைந்த மேகதாது விவகாரம்...டெல்லி பறக்கும் துரைமுருகன்...!

தீவிரமடைந்த மேகதாது விவகாரம்...டெல்லி பறக்கும் துரைமுருகன்...!

காவிரி மேகதாது விவகாரம் தொடர்பாக, மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்லவுள்ளாா்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அந்த கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. 

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார், மத்திய நீர் வழித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த ஜூன் 20-ம் தேதி எழுதிய கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடகாவின் இந்த செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். 

இதையும் படிக்க : செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு...!

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் நேற்று ஆலோசனை  நடத்தினார்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வரும் நிலையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக்கூடாது என்பதை  மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்துவதற்காக இன்று அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்லவுள்ளாா்.