ஆன்லைன் சூதாட்ட மசோதா...ஆளுநா் படுக்கைக்கு கீழே வைத்து கொள்வதற்கு அல்ல - துரைமுருகன் காரசார பதில்!

ஆன்லைன் சூதாட்ட மசோதா...ஆளுநா் படுக்கைக்கு கீழே வைத்து கொள்வதற்கு அல்ல - துரைமுருகன் காரசார பதில்!

ஆன்லைன் சூதாட்ட மசோதா ஆளுநா் அவரது படுக்கைக்கு கீழே வைத்து கொள்வதற்கு அல்ல என அமைச்சர் துரைமுருகன் கடுமையாக சாடியுள்ளார். 

வேலூரில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சா் துரை முருகன் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி மீதான பாஜக அரசின் நடவடிக்கை மத்திய அரசு ஒரு தனி மனிதனை பார்த்து பயப்படுகிறதோ என எண்ண தோன்றுகிறது என்று கருத்து தொிவித்துள்ளார்.

இதையும் படிக்க : அதிகாரத்திமிரின் உச்சம்! – கண்டனம் தெரிவித்துள்ள சீமான்

தொடர்ந்து பேசிய அவரிடம், ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் இந்த முறையாவது நிறைவேற்றுவாரா என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர், ஆன்லைன் சூதாட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மிண்டும் அதை அவர் காலதாமதப்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியவர், ஆன்லைன் சூதாட்ட மசோதா ஆளுநா் அவரது படுக்கைக்கு கீழே வைத்து கொள்வதற்கு அல்ல; அதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என கடுமையாக சாடியுள்ளாா்.