முதலமைச்சர் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்!

முதலமைச்சர் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழகத்தின் நிதி நிலையை சீர்செய்ய தமிழக முதலமைச்சர் முனைப்புடன் செயலாற்றி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் கலைஞரின் 99-வது பிறந்தயொட்டி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், தேர்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில் ஒரே ஆண்டில் 300 வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவ முகாம், நான் முதல்வன், பள்ளி மேலாண்மை குழுக்கள் உருவாக்கம் என பல திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சருக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் அப்போது நன்றி தெரிவித்துக்கொண்டார்.