பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று முதல்வர் கூறியுள்ளார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.அதில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கட்- அவுட், பேனர் வைக்கக்கூடாது என நீதிமன்றத்திற்கு சென்றதே திமுகதான் என்றும் போஸ்டர் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்றார்.திமுகவினர் இதனை கடைபிடிக்க வேண்டும். ஆளும் கட்சி என்பதால் விதிமுறைகளை பின்பற்ற கூடாது என்று கிடையாது என கூறினார்.
 
மேலும், செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்றுதான் முதல்வர் கூறியுள்ளார். இதுகுறித்த முறையான செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம் நடக்கவுள்ளது என பேசிய அமைச்சர் பின்னர் முதல்வரிடம் ஆலோசித்த பிறகுதான் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.