செங்கல் சூளை அதிபர்களுக்கு பச்சைக்கொடி காட்டும் கனிம வளத்துறையினர்...

புளியங்குடியில் அழிந்து வரும் இயற்கைவளம் - செங்கல் சூளை அதிபர்களுக்கு பச்சைக்கொடி காட்டும் கனிம வளத்துறையினர். அன்றாடம் பிழைப்பு நடத்தும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் எடுக்க அனுமதிக்காத மாவட்ட நிர்வாகம் .

செங்கல் சூளை அதிபர்களுக்கு பச்சைக்கொடி காட்டும் கனிம வளத்துறையினர்...

அன்றாடம் பிழைப்பு நடத்தும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் எடுக்க அனுமதிக்காத மாவட்ட நிர்வாகம் - செங்கல்சூளையில் மலை போல் மண் குவிக்க அனுமதித்தது எப்படி? சமூக ஆர்வலர் எழுப்பும் கேள்விக்கு அரசு நடவடிக்கை எடுக்குமா?

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதிகள் இயற்கை வளம் கொழிக்கும் பசுமைப் பகுதிகள்.

இங்கு நெற்பயிருக்கு அடுத்தபடியாக எழுமிச்சை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். புளியங்குடியில் விளையும் எலுமிச்சை பழங்கள் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகம், ஆந்திரா மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் புளியங்குடி நகரை லெமன் சிட்டி என்றே அழைத்து வருகின்றனர்.

ஆனால் இப்பகுதியில் இயற்கை விவசாயப் பண்ணை என்ற போர்வையில் பசுந்தோல் போத்திய புலியாக இயற்கை வளங்களான கனிமங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது என்றால் வியப்பாக இருக்கிறதா ?

தென்காசி மாவட்டத்தில் கடையம், மாதாபுரம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, கடையநல்லூர், சிங்கிலிப்பட்டி, சொக்கம்பட்டி, சிந்தாமணி, வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், கண்டிகைப் பேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளும், சேம்பர் செங்கல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் உள்ளன.

குடிசைத் தொழில் செய்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மிகக் குறைவாக தேவைப்படும் மன்னைக் கூட எடுக்க அனுமதிக்காத அதிகாரிகள் செங்கல் சூளை ஒவ்வென்றிலும் மலை போல மண் குவித்து வைப்பதற்கு அதிகாரிகள் அனுமதித்தது எப்படி.

அப்படித்தான் இயற்கை விவசாயம் என்ற பெயரில் இயற்கை வளங்களை கொள்ளை அடித்து கனிம வளங்களை மலை போன்று குவித்து வருகிறார் அந்தோணிச்சாமி. 


யார் இந்த அந்தோணிச்சாமி புளியங்குடி அருகில் உள்ள சிந்தாமணியை சேர்ந்தவர். இயற்கை விவசாயம் செய்வதாக இவர் அமைத்துள்ள பண்ணை தோட்டத்திலேயே தனது மகன் ஜேம்ஸ் பெயரில் மாதா சேம்பர் செங்கள் சூளையை நடத்தி வருகிறார்.

இயற்கை விவசாயத்திற்கு மண் எடுப்பதாகக் கூறி கோட்ட மலை, வாழை மலை ஆறு பகுதி இயற்கை வளம் கொஞ்சும் நிலங்களில் இருந்து அதாள பாளமாக பள்ளம் தோண்டி திருட்டு தனமாக மண் எடுத்து தனது செங்கல் சூளையில் மலையை மிஞ்சும் அளவிற்கு குவித்து வைத்துள்ளார். 


இவர் மட்டுமல்ல மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து செங்கல் சூளைகளிலும் இது போன்றே மண் மலை போல குவிக்கப்பட்டு இருப்பதை காணமுடியும். ஆனால் இந்த கடத்த மண் மலைக் குவியல் கனிமவளத்துறை அதிகாரிகள் கண்களுக்கு மட்டும் தெரியாமல் போனதற்கு காந்தி நோட்டு செய்த லீலையாகக் கூட இருக்கலாம்.

இந்நிலையில்,
தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மண் கடத்தலை தடுக்கும் வகையில் காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின்பேரில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து மண் கடத்தும் கும்பலை பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் புளியங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தினேஷ்பாபு தலைமையில்
சின்னப்பராஜ், சுதந்திரராஜா, நயினார் மற்றும் போலீசார் சிந்தாமணி செவலனேரி பகுதியில் ரோந்து சென்ற போது செவலனேரி குளத்தில் ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் அள்ளுவதை பார்த்தனர். காவல்துறையினரை கண்டதும் டிப்பர் லாரி டிரைவர் மாரிப்பாண்டி லாரியில் இருந்து இறங்கி மாதா சேம்பர் செங்கல் உரிமையாளர் ஜேம்ஸ்க்கு  போன் மூலம் தகவல் தெரிவிக்க அடுத்த வினாடியே சம்பவ இடத்திற்கு வந்தார் ஜேம்ஸ். அவர் மண் கடத்தலை பிடித்த உதவி ஆய்வாளர் தினேஷ்பாபுவிடம் நாங்கள் இயற்கை விவசாயம் செய்கிறோம்.

எங்களுக்கு பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் தெரியும். சைலேந்திரபாபு எங்களுக்கு ரெம்ப நெறுக்கமானர் என்று கூறி தனது பேரம் பேசும் படலத்தை தொடர, எதற்கும் அடிபணியாத உதவி ஆய்வாளர் தினேஷ்பாபு, டிப்பர் லாரி, ஜெ. சி.பி. இயந்திரத்தை புளியங்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு விசாரணை நடத்தியதில் டிப்பர் லாரி இயற்கை விவசாயி அந்தோணி பெயரிலும், அவரது மகன் ஜேம்ஸ் நடத்தும் மாதா சேம்பர் செங்கல் சூளைக்கு எவ்வித அனுமதியும் இன்றி மண் கடத்தியதும் தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து  டிப்பர் லாரி டிரைவர் மானிப்பாண்டி வயது 32, ஜெ.சி.பி. இயந்திர டிரைவர் சக்திவேல் வயது 20 ஆகிய இருவரையும் கைது செய்து, டிப்பர் லாரி மற்றும் ஜெ.சி.பி. இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் எவ்வித அனுமதியும் பெறாமல் இயற்கை வளங்களை பாழ்படுத்தி மண் கொள்ளையில் ஈடுபட்டு சேம்பர் செங்கல் சூளையில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ள மண் குறித்து ஆய்வு செய்ய கனிம வளத்துறைக்கும் காவல்துறையினர் கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இயற்கை விவசாயி என்ற போர்வையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் இவர்கள் மீது கனிம வளத்துறையும் - தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.