ஏரியில் செத்து மிதக்கும் ஏராளமான மீன்கள்----

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

ஏரியில் செத்து மிதக்கும் ஏராளமான மீன்கள்----

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் நைனாத்தாள் ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். இதனால் அந்த ஏரியில் மீன்கள் வரத்து அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மீன்களை அப்பகுதி மக்கள் அவ்வபோது பிடித்து சாப்பிட்டு வந்தனர். இந்தநிலையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஏரியில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. மேலும், ஏரியில் உயிருடன் உள்ள மீன்களும் வலிமை இழந்து காணப்படுகிறது.

 அந்த மீன்களின் கண்கள் பிதுங்கியவாறு உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஏரியில் மீன்கள் இறந்து வருவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, மீன் பிடித்து சாப்பிடுவதை நிறுத்தியுள்ளனர்.மேலும் யாராவது சமூகவிரோதிகள் ஏரியில் ஏதாவது விஷ திரவத்தை கொட்டி இருப்பார்களா என்ற சந்தேகமும் அப்பகுதி மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் மேட்டூர் மீன்வளத்துறை அதிகாரிகள் ஏரியை ஆய்வு செய்து மீன்கள் இறப்பதற்கான காரனங்களை கண்டறிய வேண்டும் என்றும் மீன்கள் இறப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.