தோண்டத் தோண்ட ஆச்சரியங்கள்... அகரத்தில் மைக்ரோ லித்திக் பொருட்கள் கண்டெடுப்பு...

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மைக்ரோ லித்திக் டூல் எனப்படும் நுண் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தோண்டத் தோண்ட ஆச்சரியங்கள்... அகரத்தில் மைக்ரோ லித்திக் பொருட்கள் கண்டெடுப்பு...

கீழடி, அகரம், கொந்தகையில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. மணலூரில் போதிய அளவு பொருட்கள் கிடைக்கவில்லை என அகழாய்வு பணிகள் நடைபெறவில்லை. 

கீழடி, அகரம் , கொந்தகையில் தலா எட்டு குழிகள் வரை தோண்டப்பட்டுள்ளன.  அகரத்தில் தோண்டப்பட்ட  எட்டு குழிகளில் விலங்கு உருவ பொம்மை, பானைகள், பானை ஓடுகள்,  தலையலங்கார பொம்மை, சுடுமண் அச்சு, தந்த மோதிரம் உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

கீழடியில் நெசவு தொழில் நடந்ததற்கு சான்றாக தக்கழி, சுடுமண் ஊசி, நெசவு தொழில் சக்கரம், நூல் நூற்பு கருவி உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. அகரத்திலும் முதன் முதலாக  நூற்பு கதிர், மைக்ரோ லித்திக் எனப்படும் நுண் கற்கால கருவி உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. 

எனவே கீழடி, அகரம் ஆகிய இரண்டு இடங்களிலும் நெசவு தொழில் நடந்திருக்கலாம் அல்லது அகரத்தில் நூல்களை நெய்து அதனை கீழடிக்கு கொண்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. ஏழாம் கட்ட அகழாய்வில் கீழடியில் நெசவு தொழிலில் பயன்படுத்தப்படும் ஊசிகள், தக்கழிகள், சக்கரங்கள் அதிகளவில் இம்முறை கிடைத்துள்ளன.