" சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் " - மு.க.ஸ்டாலின்.

" சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் " - மு.க.ஸ்டாலின்.

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்கள் சார்பில்“ வரவேற்பு  நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது உலகத் தரத்திலான திறமைகள், போதுமான உள்கட்டமைப்பு, ஸ்திரமான கொள்கை ஆகியவற்றுடன் விருப்பமான முதலீட்டு தளமாக தமிழ்நாடு திகழ்வதாக கூறியதுடன், தமிழகத்தில் முதலீடு செய்யும்படியும்  கேட்டுக்கொண்டார். 

மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையும் படிக்க    | ஒரே வீட்டில் இரண்டு கலெக்டரா..? ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான அக்கா,தங்கை ...!

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூரில் தமிழர்கள் பெரும் பொறுப்பில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார்.  புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக வாரியத்தை உருவாக்கியது தி.மு.க. அரசு என குறிப்பிட்ட அவர், சிந்து சமவெளி மக்கள் பேசிய மொழி தமிழ் என பெருமை தெரிவித்தார். 

மேலும்  சிங்கப்பூர்- தமிழ்நாடு இடையேயான தொடர்பு ஆயிரம் ஆண்டுக்கும் மேலானது என சுட்டிக்காட்டிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவானுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தெரிவித்தார். 

இதையும் படிக்க    | ”கோடிக்கணக்கான அளவில் முதலீடுகள் வருகின்றன” - கனிமொழி எம்.பி.