நவம்பர் 1ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை... காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தகவல்...

நவம்பர் 1ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடங்க உள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 1ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை... காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தகவல்...

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. சோனியா காந்தி தலைமையில் 5 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் குறித்து எம்.பி. மாணிக்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இனி வரவுள்ள தேர்தல்களில் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்களிடம் சோனியா காந்தி கேட்டு கொண்டதாக கூறினார்.

அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை உறுப்பினர் சேர்க்கை நடத்தவுள்தாக கூறிய மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி வர வேண்டும் என மூத்த தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.