இனி தடுப்பூசி முகாம்கள் கிடையாது...அமைச்சர் சொன்னது என்ன?

இனி தடுப்பூசி முகாம்கள் கிடையாது...அமைச்சர் சொன்னது என்ன?
Published on
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் கடந்த 38 வாரமாக நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம் இன்றோடு நிறைவடைகிறது எனவும், இனி மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கடைசி தடுப்பூசி முகாம்:

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் 38 வது மெகா தடுப்பூசி முகாமே கடைசி முகாம் என்றும், அதேசமயம், அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகையான தடுப்பூசிகளும் போடப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

பூஸ்டர் தடுப்பூசி விழிப்புணர்வு:

அதேபோல் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி வரும் 30 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாகவும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  

மக்களைத்தேடி மருத்துவம்:

தொடர்ந்து பேசிய அவர், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 90 லட்சம் பயணாளிகள் பயனடைந்து உள்ளதாக கூறினார். மேலும்,  தமிழகத்தில் 465 பேருக்கு இன்ப்ளுயென்சா காய்ச்சலாலும், 352 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும்  அமைச்சர் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com