22ஆம் தேதி நடைபெறுகிறது காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்...

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 22ஆம் தேதி காணொலி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

22ஆம் தேதி நடைபெறுகிறது  காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்...

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீர் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியிருந்த நிலையில் கூட்டம் நடைபெற உள்ளது. மாநிலங்களில் பெய்துள்ள மழையின் அடிப்படையிலும், அணைகளில் உள்ள நீர் இருப்பை பொருத்தும் நீரானது பகிர்ந்து அளிக்கப்படும். குறிப்பிட்ட டிஎம்சி அளவிற்கு மாநில அரசுகளுக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றமானது சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளனர்.

ஒவ்வொரு மாதத்திற்கும் எவ்வளவு நீர் திறப்பு இருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தினால் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன.  தமிழக அரசின் சார்பில் குறுவை சாகுபடிக்கான நீர்திறப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்த ஆணையத்தின் கூட்டம் கூடும் போதெல்லாம் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடக அரசு எப்படியாவது உள்ளே கொண்டு வந்து விடுவார்கள்.

இந்த நிலையில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 22 ஆம் தேதி காணொலி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தற்போதுள்ள புதிய அரசுடன் பல்வேறு கோரிக்கையை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.