மதுரை மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் சுவாமி திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரையில் உலகப்பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதையும் படிக்க : காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன...?
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில், மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் மாலை மாற்று வைபவமும், தொடர்ந்து, திருமாங்கல்யம் அணிவிக்கும் வைபவமும் நடைபெற்று, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும், உணவு பரிமாறப்பட்டது. இதில் 7 ஆயிரத்து 500 கிலோ அரிசி,
6 டன் காய்கறிகளைக் கொண்டு, சுமார் 300க்கும் மேற்பட்டோர் சமையல் பணிகளை செய்து பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.