சுடுகாட்டை சமூக விரோதிகள் பயன்படுத்த முடியாத வகையில் நடவடிக்கை - மேயர் பிரியா உத்தரவு

சுடுகாட்டை சமூக விரோதிகள் பயன்படுத்த முடியாத வகையில் நடவடிக்கை - மேயர் பிரியா உத்தரவு

சென்னை மாநகராட்சியில் உள்ள மயானங்களை சமூக விரோதிகள் பயன்படுத்த முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கும் படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவு

சிசிடிவி, சுற்றுச்சுவர் உயரத்தை அதிகரித்து பாதுகாப்பான மற்றும் சுத்தம் சுகாதாரமாக, கட்டணமில்லாமல் மக்களுக்கு மயானத்தில் சேவை கிடைப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு.

சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டடத்தில் உள்ள கூட்டரங்கில் மாநகராட்சியின் மேயர் பிரியா தலைமையில் சென்னையில் உள்ள மயானங்களின் நிலை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது, இதில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் கொண்டனர்.மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்ட அனுபவத்தின் படி, பல மயானங்கள் சுத்தமும் சுகாதாரமும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதற்கான காரணங்களை மேயர் அதிகாரியிடம் கேட்டரிந்துள்ளார்.

மேலும் படிக்க | நடுக்கடலில் வீசிய மூடையில் 12 கிலோ மேல் தங்கக்கட்டிகள் கண்டுபிடிப்பு

பின்னர் சமூக விரோதிகள் மயானங்களை பயன்படுத்த முடியாத வகையில் மயானத்தின் சுற்றுப்புற பாதுகாப்பு சுவர்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.  சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை மயானத்தை சுற்றியும் மயானத்திற்கு உள்ளேவும் பொருத்தப்பட வேண்டும். 24 மணி நேரமும் பணி சுழற்சி முறையில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்  எனவும் மாநகராட்சி அதிகாரிகள் இரவு நேரத்தில் காவல்துறை பாதுகாப்புடன் ஆய்வு நடத்த வேண்டும் என  உத்தரவிட்டுள்ளார்.

மயானங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். இலவச மயான சேவை பெறுவதை உறுதி செய்யும் வகையில் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க ஏதுவாக மயானங்களில் இலவச புகார் எண் காட்சிப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டுள்ளார்.