ஆசிரியர்- மாணவர் இடையிலான உறவு மேம்பட நடவடிக்கை.. உரிய ஆலோசனை வழங்குவதற்கு ஏற்பாடு - அன்பில் மகேஷ் பேட்டி

ஆசிரியர்- மாணவர் இடையிலான உறவு மேம்பட, மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது  என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்- மாணவர் இடையிலான உறவு மேம்பட நடவடிக்கை.. உரிய ஆலோசனை வழங்குவதற்கு ஏற்பாடு -  அன்பில் மகேஷ் பேட்டி

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் உலக புத்தகப் பெருவிழா நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

இந்நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி " திட்டத்தின் கீழ் ஆயிரம் மையங்களுக்கு நூலகம் அமைப்பதற்காக ₹ 10 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள்  வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக உள்ளது என்றார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்பில் மகேஷ்,ஆசிரியர்- மாணவர் இடையிலான உறவு மேம்பட, மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.